About Our Organization

Watch This Video

Play Now

எங்களைப் பற்றி

"மக்களின் சேவையில் நாம் - மகிழ்ச்சியான சமூக மாற்றத்தை நோக்கி"

மக்கள் நல பொது சேவை மற்றும் உதவி நல சங்கம் (பதிவு எண்: 35/2025)

 

மக்கள் நல பொது சேவை மற்றும் உதவி நல சங்கம் என்பது செப்டம்பர் 3, 2025 அன்று, சேலம் மாவட்டத்தின் அம்மாபேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஒரு லாப நோக்கமற்ற சமூக நல அமைப்பாகும். தனிமனித மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எங்களது சங்கம் செயல்பட்டு வருகிறது.

சங்கத்தின் நற்பண்புகள்( Our Values)

0

உறுப்பினர்கள்

0

பயனாளர்கள்

நமது சங்கத்தில் சேர்வது இப்போது சுலபமாக்கப்பட்டுள்ளது

சங்கத்தில் சேர்ந்து உங்களின் பொதுவாழ்வு நற்பண்பினை பெறுங்கள்

சமூக அக்கறையோடு செயல்படும் நமது சங்கத்தின்

சங்கத்தின் கொள்கை அறிக்கை

இந்த உன்னத நோக்கங்களை நிறைவேற்றத் தன்னார்வலர்களாகவோ அல்லது புரவலர்களாகவோ உங்கள் பங்களிப்பை வழங்க அழைக்கிறோம்.

எளிய மக்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினர், கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பெற்று, தற்சார்புடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குதல்.

  • கல்வி உதவி: வசதியற்ற மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துதல்.

  • மருத்துவச் சேவை: கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் அவசரச் சிகிச்சை உதவிகளை ஒருங்கிணைத்தல்.

  • பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு: சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மரம் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள் மூலம் பசுமையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல்.

  • அவசர கால உதவி: இயற்கை பேரிடர் மற்றும் இக்கட்டான காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரிதமாக உதவி செய்தல்.

சங்கத்தின் செயல்பாட்டாளர்களை பற்றி தெரிந்து கொள்ள